ஜனநாயகன் திரைப்படத்திற்காக குரல் கொடுத்த நடிகர் விஷால்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி 2026-2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்றது.
சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் வாக்களித்த நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய விஷால் ஜனநாயகன் திரைப்பட விவகாரம், தணிக்கை வாரியம் பற்றி கருத்து தெரிவித்தார்.
"ஜனநாயகன் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனக்கு கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ் பற்றி தெரியாது. இதுபோன்ற பிரச்சினையின் போது ஒருவேளை தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்திருந்தால், இந்த வவிகாரத்தில் ஏதாவது நடந்திருக்கலாம்.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, நீதிபதியை எப்படி கேள்வி கேட்க முடியும். தயாரிப்பாளர் சங்கத்தை விட பெரிய அமைப்பு தணிக்கை வாரியம்.
கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மக்கள் எதை பார்க்க வேண்டும் எதை கட் செய்ய வேண்டும் என்பதை நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட அமைப்பு முடிவு செய்கிறது.
உண்மையை சொல்லப் போனால், எனக்கு இதில் துளியும் உடன்பாடு இல்லை. எனினும், விதிமுறைகள் என இருக்கும் போது அதற்கு ஏற்பதான் நடந்து கொள்ள வேண்டும்," என்றார்.
(வீடியோ இங்கே )