யாழ் மாவட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் இணையத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம்!

#SriLanka #Jaffna #Meeting #Women
Soruban
4 months ago
யாழ் மாவட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் இணையத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின்இணையத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டமானது இணையத்தின் தலைவர் திருமதி சிவராஜா மரிய றோசரி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (23.07.2025)காலை 09.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இப் பொதுக் கூட்டத்திற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமதுரையில், இன்றைய இக் கூட்டம் தொடர்பில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், ஏனனில் 77 வயதடைந்த மூத்த அம்மையாரும் இளம் யுவதிகளும் இக் கூட்டத்தில் பங்குபற்றியுள்ளது சிறப்பான விடயம் எனத் தெரிவித்தார். 

மேலும், குடும்பத்தில் மற்றும் சமூகத்தில் பெண்களின் வகிபாகம் காத்திரமானது எனவும், கல்வியினை பெண்களுக்கு வழங்கினால் அது சமுகத்திற்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 150 மாதர் சங்கங்கள் வினைத்திறனாக இயங்குவதாகவும், மாதர் சங்கங்கள் பெண்கள் வளர்ச்சியில் ஈடுபடும் அதேவேளை சிறுவர்களை ஆற்றுப்படுத்துவதிலும் ஈடுபட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.மேலும், மாதர் சங்கங்களின் செயற்பாடுகளில் இடர்பாடுகள் இருப்பின் அதனை தமது கவனத்திற்கு கொண்டுவருமாறு தெரிவித்து, பெண்கள் மற்றும் சிறுவர்கள் வளர்ச்சிக்கு அனைவருக்கும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் தெரிவித்தார்.

images/content-image/2024/07/1753256074.jpg

யாழ் மாவட்டத்தின் சிறந்த மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கான தெரிவில், முதலாவதாக சுழிபுரம் மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கமும் இரண்டாவதாக ஏழாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்கமும், மூன்றாவதாக வல்வை வடகிழக்கு மாதர்கிராம அபிவிருத்திச்சங்கமும் தெரிவு செய்யப்பட்டு அவ் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கங்களின் தலைவிகளுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பொன்னாடை போா்த்தி கௌரவித்தார்.

இறுதியாக இணையத்தின் புதிய தலைவராக திருமதி மகேந்திரன் நிர்மலாதேவி, செயலாளராக வசீகரன் துளசிமலர், பொருளாளராக மகேஸ்வரி, உப தலைவராக கௌசல்யா, உப செயலாளர் பக்ஷா ஆகியோரைக்கொண்ட புதிய நிர்வாக சபையானது தெரிவு செய்யப்பட்டது. இப் பொதுக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுனேத்திரா சுதாகரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753222781.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை