ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியப் பிரதிநிதிகள் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியப் (UNFPA) பிரதிநிதிகள் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (22.07.2025 ) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்கள்.
இச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் பெண்கள் மற்றும் இளைஞர் மேம்பாட்டு நிபுணர் திருமதி மக்கி சக்கியமா, திட்ட ஆய்வாளர் திரு. ருக்சன் லொவல், Development Trust Alliance இன் சமூக நீதிப் பிரிவின் தலைவர் திருமதி சாரா ஆறுமுகம் மற்றும் திட்ட உத்தியோகத்தர் ஜீன் இராஜேந்திரன் ஆகியோா் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் விவசாயம் மற்றும் மீன்பிடி துறையில் ஈடுபடும் 25 பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து அவர்களை வலுப்படுத்தி தேசிய ரீதியிலான வியாபாரத்துடன் இணைப்பதற்கான செயற்றிட்டத்தினை மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டு, சண்டிலிப்பாய் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து பொருத்தமான பயனாளிகளளை தெரிவு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



