முல்லைத்தீவில் மீள் எழுச்சி கடன் மற்றும் அதனை ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீள் எழுச்சி கடன் மற்றும் அதனை ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (22) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மு.ப 11.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கடன் முறைமையானது மீள பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிக்கல் தன்மையை ஆராய்வதாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது கரைத்துறைப்பற்று, ஒட்டு சுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட மீள் எழுச்சி கடன் முறைமையானது மேற்பார்வை ஒழுங்குபடுத்தல் இன்மையினால் இன்று வரை முழுமையாக மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
எனவே கடனை மீள பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிபாரிசுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன .
குறித்த கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன், உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாகாண கிராம அபிவிருத்தி பணிப்பாளர், மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக, மாவட்ட செயலக துறைசார் உத்தியோத்தர்கள் முதலானோர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



