மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாச்சார விழா: 2025

சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாற்றுத்திறனாளிகளின் அழகியற்கலை திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 2025 ஆம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாச்சார விழா "சித் ரூ" நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் கடந்த ஜூன் 20 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் திருகோணமலை மாவட்டம் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது. இப்போட்டியில் பங்குபற்றிய மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சான்றிதழ்களும் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பரிசில்களும் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களினால் (2025.07.22) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தின் சமூக சேவைகள் இணைப்பாளர் த. பிரணவன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



