கிளிநொச்சி மாவட்ட ROLL BALL சாதனையாளர்கள் கௌரவிப்பு:2025

கிளிநொச்சி மாவட்ட ROLL BALL சங்கத்தின் ஏற்பாட்டில் 2025ம் ஆண்டு ROLL BALL சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
மாவட்ட ROLL BALL சங்கத்தின் தலைவி தர்மபாலா ஜெயந்தினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
கௌரவ விருந்தினர்களாக நவரத்தினராசா சிறிகாந்தன் Roll Ball பயிற்றுவிப்பாளர் - கிளி, மன்னார் கார்த்திகேசு கொண்சாட் வின்சன்ற Roll Ball பயிற்றுவிப்பாளர் - மன்னார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியிலிருந்து கூட்டுறவாளர் மண்டபம் வரை சாதனையாளர்கள் அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். மாவட்ட, மாகாண, தேசிய, சர்வதேச ரீதியில் சாதித்த ஆண், பெண் வீராங்கனைகள் கெளரவிக்கப்பட்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



