இயக்கச்சி கோட்டையில் சிறப்புற நடைபெற்ற தொல்லியல் வார நிகழ்வு!
#SriLanka
#School Student
#Principal
Soruban
4 months ago
தொல்லியல் திணைக்களத்தின் 135வது ஆண்டு நிறைவையொட்டி தொல்லியல் வார நிகழ்வு நேற்று(22.05.2025) இயக்கச்சி கோட்டையில் நடைபெற்றது.
கிளிநொச்சி , யாழ்ப்பாண தொல்லியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் U.A பந்துலஜீவ தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொல்லியல் திணைக்களப் பிராந்திய உதவிப் பணிப்பாளரது ஆலோசனைக்கமைவாக சிரமதானம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுவுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் தொல்லியல் திணைக்கள மேலாய்வு உத்தியோகத்தர்கள், வலய உத்தியோகத்தர்கள், பராமரிப்பு உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிளி.கோவில்வயல் சி.சி.த.க. பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
