விளையாட்டுக்கழகங்கள் இளைஞர்களை வழிநடத்த வேண்டும் - சிறீதரன் எம்.பி தெரிவிப்பு..!!

இன்றையதினம் காலை கழக நிர்வாகத்தினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான மயில்வாகனம் சோமசேகரம், பரமலிங்கம் பாஸ்கரன் மற்றும் ஓய்வுநிலை கிராம அலுவலர் சின்னையா பரமதாஸ், கழக உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமகாலத்தில் இளைஞர்களை பிற நடத்தைகளுக்கு இட்டுச்செல்லும் கவனக்கலைப்பான்களிலிருந்து அவர்களை மீட்டு, உடல்- உள ஆரோக்கியம் மிக்க இளைய சமுதாயத்தின் உருவாக்கத்திற்கு விளையாட்டுக் கழகங்கள் வழிசமைக்க முடியும் என்பதற்கு கண்டாவளை ரூபன் விளையாட்டுக்கழகத்தின் இயங்குநிலை முன்னுதாரணமாக விளங்குகின்றது .
என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கண்டாவளை ரூபன் விளையாட்டுக் கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறப்புவிழாவில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



