பிரான்சின் மார்சேயில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீ

#France #people #WildFire #evacuate
Prasu
3 hours ago
பிரான்சின் மார்சேயில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீ

பிரான்சின் இரண்டாவது ஆகப் பெரிய நகரமான மார்சேயில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 1,000 தீயணைப்பு வீரர்கள் களமிறங்கியுள்ளனர். 

அவர்களுக்குத் துணையாகச் சில ஹெலிகாப்டர்களும் உதவி வருகின்றன. மார்சே நகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தள்ளியுள்ள வடமேற்குப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

வெப்பநிலை குறைவாக இருப்பதாலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாலும் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுக்குள் வருவதாக அதிகாரிகள் கூறினர். கிட்டத்தட்ட ஒரு வாரமாக எரிந்து வரும் காட்டுத் தீயால் 240 ஹெக்டர் நிலப்பரப்பு நாசமாகின.

காட்டுத் தீ காரணமாக நூற்றுக் கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் அவ்வட்டாரத்தில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

தீயணைப்பு வீரர்களின் துரிதமான நடவடிக்கையால் 150 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் 150 வீடுகள் காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க உதவியதாக மீட்புப் பணிகளுக்கான அமைப்பு தெரிவித்தது.

தீயால் 120 வீடுகள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1752997942.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!