இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே கையெழுத்தாகும் 61,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம்

இந்தியா-பிரான்ஸ் இடையே ரூ.61,000 கோடி மதிப்பிலான போர்விமான என்ஜின் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் எதிர்கால போர்விமான திட்டங்களுக்கு முக்கிய அடி உறுதியாக, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே ரூ.61,000 கோடி மதிப்பில் புதிய போர்விமான என்ஜின் ஒன்றை கூட்டாக உருவாக்க திட்டமிட்டுள்ளன.
இந்த கூட்டுத் திட்டத்தின் கீழ், 120 கிலோநியூட்டன் thrust engine ஒன்றை பிரான்சின் Safran நிறுவனம் இந்தியாவுடன் சேர்ந்து வடிவமைக்க உள்ளது. இது Advanced Medium Combat Aircraft (AMCA) உள்ளிட்ட எதிர்கால யுத்தவிமானங்களுக்கு பயன்படுத்தப்படும்.
Safranன் முழுமையான தொழில்நுட்ப பரிமாற்ற உறுதி மற்றும் AMCA திட்டத்துடன் நேர்த்தியான பொருத்தம் ஆகியவைகள் இந்த ஒப்பந்தத்தில் முக்கிய பங்கு வகித்தன.
இதற்காக பிரித்தானிய நிறுவனமான Rolls Royce அளித்த திட்டத்தையும் இந்தியா பரிசீலித்தது. இதுவரை இந்தியாவிலுள்ள எல்லா யுத்தவிமானங்களும் வெளிநாட்டு இன்ஜின்களில் செயல்படுகின்றன.
இந்த புதிய ஒப்பந்தம், இந்தியா தன்னிறைவு பெறும் வழியில் ஒரு மிகப்பாரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



