காட்டுத்தீயை கட்டுப்படுத்த தொடர்ந்து போராடும் பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள்
#France
#fire
#WildFire
Prasu
1 day ago

மார்சேயின் வெளிப்புற விளிம்பை அடைந்த காட்டுத்தீயை எதிர்த்து பிரெஞ்சு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர், இதனால் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நகர மேயர் பெனாய்ட் பயான், தீ "குறைந்து வருகிறது" ஆனால் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை என தெரிவித்துள்ளார்.
தீ பரவலில் "குறிப்பிடத்தக்க சரிவு" ஏற்பட்டதைத் தொடர்ந்து மார்சேயின் புறநகர்ப் பகுதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என்று மேயர் Xல் பதிவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை முதல் ஒன்பது தீயணைப்பு வீரர்கள் மற்றும் 22 காவல்துறை அதிகாரிகள் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர்.
குறைந்தது 400 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



