பிரான்ஸ் மீது பிரித்தானியா சுமத்தும் குற்றச்சாட்டு
#France
#migrants
#England
#Accusation
Prasu
2 months ago

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சிக்கும் புலம்பெயர்வோரை பிரான்ஸ் பொலிசார் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக பிரித்தானியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டு கலவரத் தடுப்பு பொலிசார், புலம்பெயர்வோரை தடுக்க லத்தி மற்றும் பெப்பர் ஸ்பிரேயுடன் கடலுக்குள் இறங்கும் காட்சிகள் வெளியாகின.
இந்நிலையில், இப்படி புலம்பெயர்வோரைத் தடுக்க பிரெஞ்சு பொலிசார் கடலுக்குள் இறங்குவதற்கு பிரான்சிலேயே எதிர்ப்பு உருவாகியுள்ளது.
புலம்பெயர்வோரைத் தடுக்க பிரெஞ்சு பொலிசார் கடலுக்குள் இறங்குவதால், புலம்பெயர்வோர் பொலிசாரிடமிருந்து தப்பிக்கவும், அவர்களைத் தாக்கவும் முயல்வார்கள்.
கடலுக்குள் கைகலப்பு ஏற்படலாம். அதனால் உயிரிழப்புகள் அதிகமாகும் என பிரான்ஸ் தொண்டு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



