கடல் கொந்தளிப்பாக காணப்படும் - மீனவர்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 months ago

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பானது குறித்து எச்சரிக்கை விடுக்க வானிலை ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு முதல் புத்தளம் மற்றும் மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணி நேரத்திற்கு 55-60 கிலோமீட்டராக அதிகரிக்கக்கூடும் என்று திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில், கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களும் கடல்சார் சமூகத்தினரும் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



