யாழ்ப்பாண சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பம்!
#SriLanka
#Jaffna
#Lanka4
#books
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
7 hours ago

யாழ்ப்பாண சர்வதேச புத்தகக் கண்காட்சி வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்றையதினம்(21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று தொடக்கம் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியின் தொடக்க நாள் நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர், க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.
இங்கு உரையாற்றிய ஆளுநர்,
வாசிப்பே மனிதனை முழுமையடையச் செய்கின்றது.
எனவே, பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக எங்கள் அறிவுத் தேடலை வளர்த்துக்கொள்ள புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



