வரலாற்று சாதனை படைத்த கனகராஜன்குளம் மகா வித்தியாலய மாணவன்
#SriLanka
#School
#Student
#Record
Prasu
4 months ago

கனகராஜன்குளம் மகா வித்தியாலயத்தின் பெருமைமிகு மாணவன் குகதாஸன் தனோஜன் 2024 உயர்தர பரீட்சையில் கணிதப்பிரிவில் 3A சித்திகளை பெற்று,வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தையும் மற்றும் அகில இலங்கை ரீதியில் 144ஆவது இடத்தையும் பிடித்து பாடசாலையின் வரலாற்றில் புதிய சாதனை பதிவு செய்துள்ளார்.
கல்வியில் மட்டுமல்லாது, இணைபாடத் துறைகளிலும் தனோஜன் தனது திறமைகளை பரப்பியுள்ளார்:
- எறிபந்து மாகாண சம்பியன் அணி வீரன்
- கணித ஒலிம்பியாட் மாகாண மட்டத்தில் 2வது இடம்
- தேசிய மட்ட கணித ஒலிம்பியாடில் 1வது இடம் பெற்ற குழுவின் உறுப்பினர்
- கரப்பந்தாட்டம் மற்றும் உதைபந்தாட்ட விளையாட்டுகளில் சிறந்த வீரன்
- பாடசாலையின் சிரேஸ்ட மாணவ தலைவன் என்ற பதவியையும் சிறப்பாக மேற்கொண்டார்.
தனது கல்வி, விளையாட்டு மற்றும் ஒருங்கிணைப்பு திறமைகளின் மூலம்,கல்விக்கு இணைபாட விதானம் தடையல்ல “என்பதை தனோஜன் நிரூபித்து காட்டியுள்ளார்.
இந்த பெருமைமிகு சாதனைக்காக தனோஜன், அவனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



