பொலன்னறுவையில் சந்தேகத்துக்கிடமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் மீட்பு
#SriLanka
#Arrest
#vehicle
Prasu
2 hours ago

பொலன்னறுவ சிரீபுர போலி உர விற்பணையாளரின் களஞ்சியசாலை அருகே இரண்டு வீட்டுக் காணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்து மூன்று வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
5500/= ரூபாவுக்கு விற்பணை செய்யக்கூடிய 100 க்கு 21 வீதம் நைட்ரேஜன் கலந்த உரத்தினை 100க்கு 46 % வீதம் என போலி லேபல்களை ஒட்டி பொலனறுவை பிரதேசத்தின் அணைத்து விற்பணை முகவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒரு மூடை உரத்தினை 13,650/= ரூபாவுக்கு விற்பணை செய்துள்ளதுடன் 1565 உர மூட்டைகளும், அதிக விலை பொறிக்கப்பட்டு போலி லேபல் அச்சிடப்பட்ட 13500 உர பைகளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் முகாமையாளர் உட்பட 12 ஊழியர்களும் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன் பிரதான சூத்திரதாரி தப்பிச்சென்றுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



