நுவரெலியாவில் மற்றுமொரு விபத்து! கழன்று சென்ற பேருந்தின் சக்கரம்

#SriLanka #Accident #NuwaraEliya #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
3 hours ago
நுவரெலியாவில் மற்றுமொரு விபத்து! கழன்று சென்ற பேருந்தின் சக்கரம்

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

 காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

 நுவரெலியா-வலப்பனை பிரதான வீதியில் உள்ள மஹா ஊவா வளைவு பகுதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து, மட்டக்களப்புக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​பேருந்தின் முன் இடது சக்கரம் கழன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததுள்ளது.

 பின்னர் பேருந்து சாலையின் இடதுபுறத்தில் உள்ள மலையில் மோதி நின்றுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். விபத்து குறித்து வலப்பனை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பேருந்து விபத்துக்குள்ளான பகுதி செங்குத்தான மற்றும் வளைவுகள் நிறைந்த சாலையில் இருப்பதாகவும், கடந்த காலங்களில் அந்த இடத்தில் பல கடுமையான விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1747175441.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!