ரம்பொடை விபத்துக்கு குறித்து ஆராய விசேட பொலிஸ் குழு நியமனம்!

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் மேலும் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பேருந்து விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு வழிவகுத்த பல அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய விசாரணைகளை சம்பந்தப்பட்ட குழு முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது,
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க எடுக்கவேண்டி நடவடிக்கைகள் குறித்த யோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறுவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



