பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு!
#SriLanka
#Accident
#NuwaraEliya
#Bus
Dhushanthini K
17 hours ago

நுவரெலியா-கம்போல பிரதான சாலையில், ரம்பொடவின் கரடியெல்ல பகுதியில் இன்று (11.05) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது பதினைந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்து கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகலுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



