மாணவி உயிர்மாய்த்த சம்பவம் - கல்வி நிறுவன உரிமையாளர் சிஐடியில் முறைப்பாடு
#SriLanka
#Colombo
#Death
#Student
#Abuse
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
1 month ago

கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவத்துடன் தொடர்புப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலைய உரிமையாளரும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான சிவானந்தராஜா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
அவர் இன்று மாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
குறித்த மாணவியின் மரணத்துடன் தம்மையும் தமது அரசியலையும் தொடர்புப்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரியே சிவானந்தராஜா முறைப்பாடு செய்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



