யாழ். வைத்தியசாலையில் இளம் குடும்பப் பெண் மரணம் ; விசாரணையில் வெளிவந்த தகவல்
#SriLanka
#Death
#Hospital
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
4 months ago

தீ காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
மன்னார் - மடு பகுதியைச் சேர்ந்த 29 வயது குடும்பப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனக்கு தானே தீ வைத்துள்ளார்.
இதனால் தீ காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (08) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



