இலங்கை விமான படையின் ஹெலிஹொப்டர் விபத்து!

#SriLanka #Accident #Lanka4 #AirCraft #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
4 months ago
இலங்கை விமான  படையின் ஹெலிஹொப்டர் விபத்து!

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை விபத்துக்குள்ளானது. 

 இலங்கை விமானப்படையின் 7 ஆம் இலக்க படைப்பிரிவுக்குச் சொந்தமான குறித்த ஹெலிகொப்டர் மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 கலைந்து செல்லும் அணிவகுப்பின் போதே இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஹெலிகொப்டரில் இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் பயணித்துள்ளனர். அதில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

(UPDATE)

இன்று காலை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் ஹெலிகொப்டரில் பயணித்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746722455.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!