ஜனாதிபதியின் வியட்நாம் பயணத்திற்கான ஜெட் விமானம் தொடர்பில் வெளியான தகவல்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாமில் இருந்து திரும்புவதற்கான தனியார் ஜெட் விமானத்திற்கான செலவுகளை யார் ஏற்றுக்கொண்டார்கள் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியபோது பாராளுமன்றத்தில் சூடான வாதங்கள் எழுந்தன.
விமானச் செலவுகளை ஒரு நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருவதாகவும், இது குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜகருணா சபையில் தெரிவித்தார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை அரசாங்கம் ஜெட் விமானத்திற்காக ஒரு சதம் கூட செலவிடவில்லை என்றும், அனைத்து செலவுகளையும் வியட்நாமில் உள்ள ஒரு பௌத்த சங்கம் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
மே 6 ஆம் திகதி வியட்நாமில் நடைபெறும் ஐ.நா. வெசாக் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற ஜனாதிபதி அழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
"ஜனாதிபதி உரைக்குப் பிறகு தேர்தலுக்குத் திரும்பி வர முடியாது என்று நாங்கள் அவர்களிடம் தெரிவித்தோம். எனவே, ஏற்பாட்டாளர்களான வியட்நாமில் உள்ள ஒரு புத்த சங்கம் ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்தது," என்று அவர் கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



