கொழும்பு மாநகர சபை அதிகாரத்தை ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு செல்ல விடாது எதிர்க்கட்சிகள் கைப்பற்ற ஏற்பாடு

கொழும்பு மாநகர சபை அதிகாரத்தை ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு செல்ல விடாது எதிர்க்கட்சிகள் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முயற்சி குறித்த கலந்துரையாடல்கள் பல பல இடங்களில் இடம் பெற்று வருவதாக அறிவிக்கப்படுகிறது எதிர்க் கட்சிகள் அனைத்தையும் தொடர்பு படுத்தி அனைத்து அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சபைகளையும் கைப்பற்றப்படும் எனவும் இதில் கொழும்பு மாநகர சபை மிகவும் முக்கியமானது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இப்பேச்சு வார்த்தைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் இதற்கிணங்க கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவி முக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகிறது.
அவ்வாறு இடம் பெற்றால் இப்பதவிக்கு டாக்டர் Ruwais Ganiffa இன் பெயர் சிபார்சு செய்யப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகளின் படி கொழும்பு மாநகரின் 13 பிரிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ள போதிலும் இக்கட்சியால் 48 ஆசனங்களையே வெல்ல முடிந்துள்ளது.
எனினும் எதிர்க் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசிய கட்சி பொது ஜன பெரமுன சர்வஜன அதிகாரம் கட்சி
பொதுஜன ஐக்கிய முன்னணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுயேச்சை கட்சிகள் என 69 உறுப்பினர்கள் மத்தியில் பிரிந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



