தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!
#SriLanka
#Election
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 hour ago

கண்டி - பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னொருவ பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
கலகெதர - மினிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (05.05) மாலை உயிரிழந்துள்ளார்.
பெண் அரச உத்தியோகத்தர் கன்னொருவ பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுகயீனமுற்ற நிலையில், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



