பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது?

அனைத்து உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கும் தேர்ந்தெடுத்து நியமிக்கப்படவிருக்கும் உறுப்பினர் எண்ணிக்கை நூற்றுக்கு 60 வீதம் எனக் கருத்திற் கொண்டு, எஞ்சிய நூற்றுக்கு 40 வீதம் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் எண்ணிக்கை எனக் கணிப்பிடப்படுகின்றது. இவ்விரண்டினதும் கூட்டுத்தொகை குறித்த உள்ளூர் அதிகார சபையின் உறுப்பினர் எண்ணிக்கையாகும்.
உதாரணம்-:
A என்னும் பிரதேச சபை
வட்டார அடிப்படையில் நூற்றுக்கு 60 வீதக் கணிப்பீடு
ஒருமை வட்டாரம் - 14
02 உறுப்பினர்களைக் கொண்ட பன்மை வட்டாரம் - 01
வட்டாரங்களின் கூட்டுத்தொகை - 15
ஒருமை வட்டார அபேட்சகர்கள் - 14
பன்மை வட்டார அபேட்சகர்கள் - 02
அபேட்சகர்களின் எண்ணிக்கை - 16
இதன் பிரகாரம் வட்டார அடிப்படையில் நூற்றுக்கு 60 வீதம் - 16
விகிதாசார அடிப்படையில் நூற்றுக்கு 40 வீதக் கணிப்பீடு
முழு வட்டாரத்திற்கும் வட்டார அடிப்படையிலான அபேட்சகர்களின் எண்ணிக்கை x 40/60
= 16 x 40/60
= 10.66 ( தசம தானத்தைக் கருத்திற் கொள்ளாது) முழு எண்ணிக்கையை கணக்கிடவும்.
அதன் பிரகாரம் விகிதாசார அடிப்படையிலான நூற்றுக்கு 40% =10
இதன் பிரகாரம் A என்னும் பிரதேச சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை (16+10) = 26
இதன் அடிப்படையில் X, Y ஆகிய கட்சிகள்; பெற்றுக் கொண்ட வாக்குகள் வாக்குகளின் கூட்டுத்தொகை (27938+23274)
= 51212
25 சதவீத சமான உறுப்பினர்கள் எண்ணிக்கை (26/4)
=6.5
சராசரி (51212 / 6.5)
=7878.76
X கட்சியினால் நியமிக்கும் பெண் உறுப்பினர்கள்
(27938 / 7878.76)
= 3.5
3 ( தசம தானத்தைக் கருத்திற் கொள்ளாத முழு எண்)
Y கட்சியினால் நியமிக்கும் பெண் உறுப்பினர்கள்
(23274 / 7878.76)
=2.95
2 ( தசம தானத்தைக் கருத்திற் கொள்ளாத முழு எண்)
தவிசாளர் / துணைத் தவிசாளர் அல்லது முதல்வர் /பிரதி முதல்வர் ஆகியோர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர்
ஏதேனுமொரு அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு குறித்த உள்ளூர் அதிகார சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையின் நூற்றுக்கு 50 சதவீதமானவற்றில் வெற்றி பெற்றிருந்தால் அவ்வரசியற் கட்சியின் செயலாளருக்கு அல்லது சுயேச்சைக் குழுத் தலைவருக்கு இப்பதவி நியமனங்கள் தொடர்பாக தீர்மானிக்க முடியும்.எந்தவொரு அரசியற் கட்சியும் அல்லது சுயேச்சைக் குழுவும் குறித்த உள்ளூர் அதிகார சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையின் நூற்றுக்கு 50 சதவீதமான எண்ணிக்கை பெறத் தவறியிருந்தால் குறித்த உள்ளூர் அதிகார சபையின் ஆரம்பக் கூட்டத்தொடரின் போது அங்கு சமூகமளித்திருக்கும் உறுப்பினர்களிடையே நடாத்தப்படும் வாக்கெடுப்பின் மூலம் மேற்படி நியமனங்கள் செய்யப்படலாம்.
உறுப்பினர் ஒருவர் இறந்தால் அல்லது கேட்டு விலகினால் அல்லது வேறேதேனும் காரணத்தினால் வெற்றிடம் ஏற்படுமிடத்து, அந்த வெற்றிடத்தை நிரப்புவது எவ்வாறு?இவ்வாறான சந்தர்ப்பங்களில் பழைய தேர்தல் முறையின் பிரகாரம் இடைத்தேர்தல் நடாத்தப்பட மாட்டாது என்பதுடன், வெற்றிடத்திற்காக ஒருவரைப் பெயர் குறித்து நியமிக்கும் அதிகாரம் கட்சியின் கட்சிச் செயலாளருக்கு உள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



