காணி உரிமம் தொடர்பில் புலம்பெயர் மக்களுக்கு வேண்டுகோள் (வீடியோ இணைப்பு)

ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டிலே சர்வதேச வரவிலக்கணப்படி அகதிகளாக இருக்கும் போது அவர்களது நிலங்களை அவர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று என்று சொல்லி கையகப்படுத்துவது முறையற்ற செயல் அதை நாங்கள் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன்.
வட மாகாணத்தில் உள்ள 5940 ஏக்கர் காணிய கையகப்படுத்துவதற்கு எதிரான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(02) முற்பகல் வெற்றிலைக்கேணியில் உள்ள பொது மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
இந்த காணி நிர்ணய கட்டளைச் சட்டம் என்பது இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1931 ஆம் ஆண்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதிலே யாரும் பயன்படுத்தாத தரிசு நில காணிகள் அரச காணிகள் என சொல்லப்பட்டுள்ளது. யாராவது காணிகளை உபயோகித்து விட்டு கைவிட்டு இருந்தால் இந்த சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் பூர்வாங்க அறிவித்தல் பிரசுரிக்கலாம். அந்த பூர்வாங்க அறிவித்தால் பிரசுரித்து மூன்று மாத காலத்தில் காணி உரிமை உள்ளவர் காணி ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
முன்வைக்காத விட்டால் அரச காணியாக பிரகடனப் படுத்தப்படும். இதுதான் கணி காணி நிர்ணய கட்டளை சட்டத்தின் விடயம். உரிமம் உண்டு என்று கோரிக்கை விடுத்தால் அந்த ஆவணங்கள் சோதித்துப் பார்த்து இருப்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அக் காணி விடுவிக்கப்படும். மிக மோசமான விடயம் இந்த அட்டவணையில் பல இடங்கள் குறிக்கப்பட்டுள்ளது.
இங்கு உள்ளவர்கள் தாங்கள் பாவிக்கும் காணி தொடர்பான கோரிக்கைகளை எழுத்து மூலமாக முன்வைக்க வேண்டும். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் இப் பிரதேசத்திலே பாலகாலம் பாரிய இடம் பெயர்வு நடந்தது இதனால் காணி ஆவணம் இல்லாமல் போயிருக்கலாம். காணி அனுமதிப் பாததிரங்கள் புதுப்பிக்கப்படாது இருந்திருக்கலாம். காணி உறுதி உரிமையாளர் பல காலத்துக்கு முன்னால் இறந்திருக்கலாம். இவ்வாறாக நீண்ட இடைவெளி இருக்கின்ற நிலையிலே இதில் உரிமை இருப்பது என்று சொல்வது சற்று கடினமாக இருக்கும்.
உங்களது ஆவணங்களை பரிசோதித்து பார்த்து என்ன இருக்கின்றது என்ன இன்னும் வேண்டும் என்ற நிலைமையை அவதானிக்க வேண்டும். எவ்வளவு பேரிடம் ஆவணங்கள் இருக்கின்றது என்பதை கொண்டுதான் அரசுடன் பேசலாம். புலம்பெயர் நாட்டில் உள்ளவர்களிடம் ஓர் அன்பான கோரிக்கையை முன்வக்கிறோம்.
உங்களுக்கு இங்கே காணி இருக்குமாயின் தயவு செய்து இங்கு வந்து அல்லது சட்டபூர்வ அற்ரோனிக் தத்துவக்காரரை நியமித்து நில உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அப்படி காணியில் அக்கறை இல்லையென்றால் இங்கு காணி இல்லாத எமது மக்களுக்கு இனாமமாக அதனை எழுதிக் கொடுங்கள்.அரச காணியாக போவதை அனுமதிக்க வேண்டாம். இந்தியாவிலே தற்போது ஒரு இலட்சத்தை அண்மித்த எமது மக்கள் இருக்கிறார்கள்.
சர்வதேச சட்டத்தில் அவர்கள் அகதி என்றே இருக்கின்றார்கள். ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டிலே சர்வதேச வரவிலக்கணப்படி அகதியாக இருக்கின்ற போது அவர்களது நிலங்களை அவர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று சொல்லி கையகப்படுத்துவது முறையற்ற செயல். அதனை நாங்கள் அனுமதிக்க முடியாது.
அதை வைத்துத்தான் இந்த வர்த்தமானி பிரசுரத்தை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தோம். ஆனால் அதை வற்புறுத்தி வலுக் கட்டாயமாக செய்கின்ற அதே வேளை எந்த எந்த அனுமதிப் பத்திரம் உண்டு தரவுகளையும் திரட்டி கொள்ளது முக்கியமான விடயம் என அவர் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



