எல்லை தாண்டும் படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க நடவடிக்கை!

#SriLanka #Fisherman #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
10 hours ago
எல்லை தாண்டும் படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க நடவடிக்கை!

இந்தியப் படகுகளை நடுக் கடலில் மூழ்கடிக்கும் எழுத்து மூல பரிந்துரையை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள இயக்குநர் எல்.ஜி.ஆர் கடிதம் மூலம் கோரியுள்ளார். 

 இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட 184 படகுகள் தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

 இதில் 74 படகுகள் அரச உடமையாக்கப்பட்டதோடு 13 படகுகளை விடுவிக்கவும் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.

 அரச உடமையாக்கப்பட்ட 74 படகுகளில் 2022 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பிடிக்கப்பட்ட 34 படகுகள் உடனடியாக நடுக் கடலில் மூழ்கடிக்கப்படவுள்ளன.

 நீருக்கடியில் செயற்கை அடி மூலக்கூறுகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ் நடுக்கடலில் மூழ்கடிப்பதற்காக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர்களின் எழுத்துமூல சிபார்சை அனுப்பி வைக்குமாறு கோரியே கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள இயக்குநர் எல்.ஜி.ஆர் DFAR/TI/INV/11/IND/2025 இலக்க கடிதம் மூலம் கோரியுள்ளார்.

 இந்நிலையில் இக் கடிதம் மூலம் இந்தியப் படகுகள் நடுக் கடலில் மூழ்கடிக்கும் திட்டம் உறுதி செய்யப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1746052587.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!