வெளிநாடுகளில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட வாகனங்கள்!
#SriLanka
#Hambantota
#Lanka4
#Import
#vehicle
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
4 months ago

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்துவரப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது, இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர், துறைமுகத்துக்கு வந்த முதல் வாகனக் கப்பலாகும்.
இந்த கப்பலில் நான்கு உயர் மற்றும் கனரக வாகன அலகுகள் இருந்துள்ளன. அத்துடன் ஜப்பானின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர், பிராடோ, BMW, மெர்சிடிஸ் பென்ஸ், டொயோட்டா ரைஸ், ஹோண்டா வெசெல், டைஹாட்சு மற்றும் சுசுகி வேகன் ஆர் போன்ற பிரபலமான வாகனங்களும் இதில் உள்ளடங்கியுள்ளன.
இதேவேளை, மற்றுமொரு வாகனக் கப்பல், மே மாத ஆரம்பத்தில் துறைமுகத்துக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3500 வாகனங்கள் எடுத்து வரப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



