பொதுப் போக்குவரத்து சேவைகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ள விடையங்கள்!

#SriLanka #Minister #Lanka4 #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
2 days ago
பொதுப் போக்குவரத்து சேவைகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ள விடையங்கள்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் ஒன்பது மாகாணங்களின் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளின் தலைவர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

 NTC, SLTB மற்றும் மாகாண அமைப்புகளின் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கையின் பயணிகள் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

 எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு: – 

புத்தளம் பாதையில் ஒருங்கிணைந்த நேர அட்டவணையை உடனடியாக செயல்படுத்துதல். - 

138வது வழித்தடத்தில் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்குதல், 

அனைத்து பேருந்துகளையும் ஒரே சங்கத்தின் கீழ் லாபப் பகிர்வு பொறிமுறையுடன் இயக்குதல்.

 - அனைத்து பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் சிசிடிவி கமராக்களை கட்டாயமாக நிறுவுதல்.

 - டிஜிட்டல் அமைச்சகத்துடன் இணைந்து நிகழ்நிலை பற்றுச்சீட்டு முன்பதிவு முறையை உருவாக்குதல்.

 - பேருந்து ஓட்டுநர்களுக்கு திடீர் போதைப்பொருள் மற்றும் மது சோதனை நடத்துதல்.

 - டிக்கெட் இயந்திரங்கள் மூலம் டிக்கெட் வழங்குவதை கட்டாயமாக்குதல் (சலுகைக் காலம் வழங்கப்படும்).

 - பயணிகள் பேருந்துகளுக்கான விவரக்குறிப்புகளை நிறுவுதல்.

 - பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட்களை பயன்படுத்தலை கட்டாயமாக்கல்

 - புதிய பேருந்துகளுக்கு புதிய வழித்தடங்களை ஒதுக்குவதற்கான ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்துதல்.

 - NTC, SLTB மற்றும் ஒன்பது மாகாணங்களுக்கும் தனித்தனி எண்களாக பயணிகள் விதிமீறல்களைப் முறைப்பாடளிக்க அனைத்து பேருந்துகளிலும் வட்ஸ்அப் எண்களைக் காட்சிப்டுத்தல்.

 இந்த முடிவுகளை செயல்படுத்துவதற்குத் தேவையான முதற்கட்ட பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ரத்நாயக்க அறிவுறுத்தினார், 

மேலும் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1745792219.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!