ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி - 06 பேர் படுகாயம்!
#SriLanka
#Accident
#Bus
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 week ago

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று தனியார் பேருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், படுகாயமடைந்த மூன்று பேர் கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இதில் ஒரு பள்ளி மாணவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி அதிகளவு மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பேருந்து ஓட்டுநர் ஹட்டன் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
(வீடியோ VIDEO)
அனுசரணை



