கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் திருப்பம் : கொலையாளி தொடர்பில் வெளியான தகவல்!
#SriLanka
#Kanemulla Sanjeeva
Thamilini
9 months ago
கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபர் என சந்தேகிக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன செய்துள்ள மற்றுமொரு குற்றச்சாட்டை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் 13.12.2024 அன்று கந்தானை பொலிஸ் பிரிவின் வீதி மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டை T-56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இது வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த குற்ற சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
