நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை : முக்கிய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!
#SriLanka
#weather
#Rain
Dhushanthini K
2 months ago

பொலன்னறுவை மாவட்டம் உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்படி, கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும், கவுடுல்ல குளத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




