பிரான்ஸில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 9 அகதிகள்
#Arrest
#France
#Refugee
Prasu
11 months ago
பிரான்ஸில் மருத்துவர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து தொலைபேசி ஒன்றை பறிக்க முற்பட்ட 9 அகதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் பா-து-கலே மாவட்ட மருத்துவகனையில் இடம்பெற்றுள்ளது. மருத்துவமனைக்குள் கத்தி, இரும்புக்கம்பிகள் போன்ற ஆயுதங்களுடன் உள் நுழைந்த இருபது வரையான அகதிகள், மருத்துவமனையில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த மருத்துவரையும் தாக்கி, அவரிடம் இருந்து தொலைபேசியினை பறிக்க முற்பட்டுள்ளனர்.
அதற்கிடையில் காவல்துறையினர் தலையிட்டு நிலமைகளை கட்டுப்படுத்தினர். மொத்தமாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்