பிரிட்டன் அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்! தமிழ் பிரதிநிதிகளை சந்திப்பு
#SriLanka
#Britain
Mayoorikka
10 months ago
பிரிட்டனின் இந்து - பசுபிக் பிராந்தியத்துக்கான அமைச்சர் கெதரின் வெஸ்ட் யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணம் பொது சன நூலகத்துக்கு விஜயம் செய்த பிரிட்டன் அமைச்சர் அங்கு வடக்கு மாகாண ஆளுநர், வர்த்தகர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்