முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்!
#SriLanka
Thamilini
10 months ago
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன தனது 71 ஆவது வயதில் இன்று காலமானார்.
கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயவர்தன, 1988ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலுடன் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அவர் சமகி ஜன பலவேகய வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தார்.