JICAவின் உப தலைவருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் கலந்துரையாடல்!
#SriLanka
Thamilini
10 months ago
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஷோஹெய் ஹரா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டின் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு JICA ஆதரவளிப்பது குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டத்தை நிறைவு செய்தல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய ஆதரவிற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது பாராட்டுக்களை தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.