இராஜதந்திர சேவையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தூதுவர்கள் நியமனம்!

#SriLanka #AnuraKumaraDissanayake
Thamilini
10 months ago
இராஜதந்திர சேவையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தூதுவர்கள் நியமனம்!

இலங்கையின் இராஜதந்திர சேவையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக  உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நான்கு தூதுவர்களையும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

நியூசிலாந்திற்கான உயர் ஸ்தானிகராக டபிள்யூ.ஜி.எஸ்.பிரசன்னவும், கட்டாருக்கான தூதுவராக ஆர்.எஸ்.கான் அசார்ட், ரஷ்யாவுக்கான தூதுவராக எஸ்.கே.குணசேகர, குவைத்துக்கான தூதுவராக எல்.பி.ரத்நாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (7ஆம் திகதி) இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி உத்தியோகபூர்வ நியமனங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை