வடக்கில் இன்றுமுதல் அமுலாவுள்ள புதிய நடைமுறை: மீறினால் சட்ட நடவடிக்கை பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை

#SriLanka #NorthernProvince
Mayoorikka
10 months ago
வடக்கில் இன்றுமுதல் அமுலாவுள்ள புதிய நடைமுறை: மீறினால் சட்ட நடவடிக்கை பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை

வட மாகாணத்தில் உள்ள வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்படுவதால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.

 இதனால் இன்றுமுதல் ஒரு வாரத்திற்கு வட மாகாணம் முழுவதும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக எச்சரிக்கை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சீ.ஏ.தனபால தெரிவித்துள்ளார்.

 அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டும் கருத்தில் கொள்ளாத கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலிகளின் உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு, அதனையும் பொருட்படுத்தாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சீ.ஏ.தனபால மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை