தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு : இளைஞர் ஒருவர் பலி!
#SriLanka
#GunShoot
Thamilini
10 months ago
கல்கிஸ பகுதியில் இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும், காயமடைந்தவர் 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.