கொழும்பு மற்றும் துபாய் இடையே கூடுதல் விமான சேவைகளை இயக்க திட்டமிடும் எமிரேட்ஸ்!
#SriLanka
Thamilini
11 months ago
உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், 2025 ஜனவரி 02 முதல் கொழும்பு மற்றும் துபாய் இடையே கூடுதல் விமான சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விமானமானது, இருக்கை கொள்ளளவை 30 வீதத்தால் அதிகரிக்கிறது.
இந்த சேவையானது 2025 இல் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் இலங்கையின் திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறது.
கூடுதல் சேவையானது 31 மார்ச் 2025 வரை வாரத்தில் ஆறு முறை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.