ஆயுத ஏற்றுமதி விதிகளை தளர்த்த சுவிஸ் நாடாளுமன்றம் நடவடிக்கை
#Parliament
#Switzerland
#Weapons
Prasu
1 hour ago
சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்றத்தின் மேல் சபை, போர்ப் பொருட்கள் சட்டத்தில் திருத்தங்களை அங்கீகரித்துள்ளது. பாரம்பரியமாக நடுநிலை வகிக்கும் நாட்டில் ஆயுத ஏற்றுமதி மீதான நீண்டகால கட்டுப்பாடுகளை எளிதாக்க வாக்களித்துள்ளது.
திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், சுவிஸ் உற்பத்தியாளர்கள் 25 மேற்கத்திய நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் சுவிஸ் தயாரித்த ஆயுதங்களை மறு ஏற்றுமதி செய்வதற்கு முன் ஒப்புதல் தேவைப்படும் விதிகள் எளிதாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றங்கள் இருந்தபோதிலும், உக்ரைனுக்கு நேரடியாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது தொடர்ந்து தடைசெய்யப்படும்.
வார தொடக்கத்தில் கீழ் சபையின் ஒப்புதலைத் தொடர்ந்து, மேல் சபை 31 ஆதரவாகவும் 12 எதிராகவும் திருத்தங்களை நிறைவேற்றியது.
(வீடியோ இங்கே )