அரச அதிகாரிகளின் பிணைமுறி கட்டளைச் சட்டத்தை மீளாய்வு செய்ய தீர்மானம்!
#SriLanka
Dhushanthini K
5 months ago

அரச அதிகாரிகளின் பிணைமுறி கட்டளைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச உத்தியோகத்தர்களின் பிணைமுறிச் சட்டத்தை முழுமையாக மீளாய்வு செய்வதற்கு தேவையான திருத்தங்களை அடையாளம் காண இந்த குழு தனது பங்களிப்பினை வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த அரச அதிகாரிகளின் பிணைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு அறிவுறுத்துமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



