சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்யும் வர்த்தமானி வெளியீடு!
#SriLanka
#children
Dhushanthini K
5 months ago

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவது தடைசெய்யப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் டொக்டர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.



