புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமனம்!
#SriLanka
Dhushanthini K
5 months ago

புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
ரியர் அட்மிரல் காஞ்சனா பனாகொட பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். 1989 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் கெடட் அதிகாரியாக இணைந்துகொண்டார்.
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் தனது அடிப்படைப் பயிற்சியை முடித்த பின்னர், அவர் 1991 இல் உப லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.



