தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களின் விசாரணைகள் நிறைவு!
#SriLanka
Mayoorikka
11 months ago
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்க தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து அடுத்த அமர்வில் முடிவு எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.