இலங்கையில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தும் நியூசிலாந்து!
#SriLanka
#Newzealand
Thamilini
11 months ago
இலங்கையில் வருடாந்தம் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஆதரவளிப்பதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.
அதேவேளை, உணவு பாதுகாப்பு, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த நியூசிலாந்து அரசு முழு ஆதரவை இலங்கைக்கு வழங்கும் என உறுதியளித்துள்ளது.
நியூசிலாந்து தூதுவர் டேவிட் பயினுக்கும் அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் நியூசிலாந்து முதலீடுகளுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக நியூசிலாந்து தூதுவர் உறுதியளித்துள்ளார்.