இராமநாதன் அர்சுனாவிற்கு கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கிய நீதிமன்றம்!
#SriLanka
#Court
Thamilini
11 months ago
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்சுனாவிற்கு கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்று அதன் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சரணடைந்தார்.
இதன்போது அவர் கடும் எச்சரிக்கையுடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.