2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பம்!
#SriLanka
#budget
#AnuraKumaraDissanayake
Dhushanthini K
8 months ago

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சர்கள் மட்டத்திலான முன் கலந்துரையாடல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறுகின்ற குறித்த கலந்துரையாடலில், கல்வி அமைச்சின் வரவு செலவு திட்டம் தொடர்பான வரவு செலவு திட்ட யோசனைகள் மீதான விவாதம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.



