மின்சார கட்டண திருத்த யோசனைகள் இன்று கையளிப்பு

#SriLanka
Mayoorikka
11 months ago
மின்சார கட்டண திருத்த யோசனைகள் இன்று கையளிப்பு

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, இன்று (6), பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

 குறித்த தரவுகள் மீளாய்வு செய்யப்பட்டு, இறுதிப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட பிரேரணையை கையளித்த பின்னர், மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும்.

 இலங்கை மின்சார சபை மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான பிரேரணையை முன்னர் சமர்ப்பித்திருந்த போதிலும், அதனை திருத்தியமைத்து, மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமென, பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்திருந்தது. 

 அதன்படி புதிய திட்டத்தை மின்சார வாரியம் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை